ஜெயலலிதா மரணத்தில் நடந்த உண்மை?! அறிக்கையை வெளியிடுவது பற்றி தமிழக அரசு முடிவு செய்யும்! நீதிபதி ஆறுமுகசாமி!

 
நீதிபதி ஆறுமுகசாமி  ஜெயலலிதா

அறிக்கையை வெளியிடுவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நீண்ட நாள் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக, 2017ல் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் பதவி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் விசாரணை நடத்திய ஆணையம், ஏப்ரல் 26-ல் விசாரணையை நிறைவு செய்தது. 

ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர், நீதிபதி ஆறுமுகசாமி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார்.

ஆறுமுகசாமி

விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், சாட்சிகளை விசாரிப்பதில் கால தாமதம் செய்யவில்லை. ஒரு வருடத்தில் 149 சாட்சிகளை விசாரித்தேன். ஒவ்வொரு சாட்சிகளிடமும் மிக விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. ஆணையத்தின் சந்தேகங்கள் அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் என்ன உள்ளது என்பதை நான் வெளியில் சொல்ல முடியாது.

விசாரணைக்கு, தான் வரவில்லை என சசிகலா கடிதம் கொடுத்தார். இதனால், எழுத்து பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டது. அவர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஜெயலலிதா மரணத்திற்கு 3 மாதங்களுக்கு பிறகே எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் அறிக்கை கொடுத்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியீடு விளம்பர யுக்தியாக இருக்கலாம்.

ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதில் எவ்வித சந்தேகம் இல்லை. அதனால் தான் போயஸ் கார்டனில் விசாரணை நடத்தவில்லை. விசாரணை நடத்தியது அதிகம். எழுதியது குறைவு. தேவையானவற்றை மட்டும் அறிக்கையில் எழுதி உள்ளேன். என் தனிப்பட்ட கருத்தை அறிக்கையில் அதிகமாக பதிவு செய்யவில்லை. அறிக்கையை வெளியிடுவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web