பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் ? - மத்திய அரசு சூப்பர் தகவல் !!

 
petrol

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டபோதிலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாததால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன.

கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் குறைந்து வருகிறது. எனினும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ரஷ்யாவிடம் இருந்து மிககுறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியபோதும் பெட்ரோல், டீசல் விலையை இந்தியா குறைக்கவில்லை. இதனால் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. 

petrol

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கலந்துகொணடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை. எனினும், அந்நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து எரிபொருள் விலையை உயா்த்தாமல் இருந்தன.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும், அச்சுமையை மக்கள் மீது சுமத்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டன. அதனால் கடந்த 6 மாதங்களாக பெட்ரோலிய நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன. தற்போது அந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டியுள்ளது. பழைய இழப்புகளை ஈடு செய்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளது, என்றாா்.

petrol

இந்நிலையில், எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் நோக்கில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web