இங்கிலாந்தின் அடுத்த ராணி பட்டம் யாருக்கு?! டயானாவின் மகன்கள் நிலை என்ன ஆகும்?!! ஒரு பார்வை!!

 
சார்லஸ் கேமிலா

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் தமது 96 வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனை பக்கிம்ஹாம் பேலஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து புதிதாக ராணி ஆக போகும் நபர் யார் என்ற பெரும் சர்ச்சை உருவாகி வருகிறது. நேற்று பிற்பகல் 12 மணி அளவில் ராணி எலிசபெத் II திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. முக்கியமாக எலிசபெத் II உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து தாவல்கள் வெளியாகி வந்தன. இதையடுத்து எலிசபெத் உடனடியாக பலமோரல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதில், எலிசபெத் II உடல்நிலை மோசமாக இருப்பதாகவும். அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்திய நேரப்படி நேற்று  இரவு 8 மணி அளவில் சில ஊடகங்கள் ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டன. அதே சமயம் எலிசபெத் IIவை பார்க்க அவரின் உறவினர்கள் பலரும் தனித்தனி விமானங்களில் இங்கிலாந்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். முக்கியமாக பிரின்ஸ் சார்ல்ஸ் ராணி எலிசபெத் இருக்கும் பலமோரல் பகுதிக்கு விமானத்தில் வந்தார். இங்கிலாந்தில் இன்று  நடக்க இருந்த அனைத்து  அரசு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.  இதையடுத்து புதிதாக ராணி ஆக போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக இங்கிலாந்து ராஜ் குடும்பத்தில் ராஜா - ராணியின் முதல் வாரிசுதான் ராஜா பதவிக்கு வருவார்.

டயானா மறைந்த தினம் இன்று – (ஆகஸ்ட் 31, 1997)

ஆனால் அவருக்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும். ராஜா - ராணியில் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை அவர்களின் குழந்தைகள் ராஜா - ராணி பதவியை ஏற்க முடியாது என்பது தான் இங்கிலாந்து பாரம்பரியம். அந்த வகையில் இங்கிலாந்து ராஜா பிலிப் 2021ல் இறந்துவிட்டாலும், எலிசபெத் உயிரோடு இருந்ததால் அவரின் மகன் சார்ல்ஸ் ராஜா பதவியை ஏற்க முடியவில்லை. எலிசபெத் II  70 வருடமாக  ராணி பதவியில் இருந்தார். எலிசபெத் II விற்கு மொத்தம் 4 குழந்தைகள்,  8 பேரக்குழந்தைகள், 12 கொள்ளுபேர குழந்தைகள் . இவருடைய உயிரிழப்பால் அவரின் மகன் சார்ல்ஸ் இங்கிலாந்தின் ராஜாவாகிறார்.

வில்லியம் ஹாரி

இவருக்கு வயது 73. சார்லசின் மனைவிதான் டயானா. டயானா  1997லேயே விபத்தில் பலியானார். டயானாவிற்கு பிறந்தவர்கள்தான் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி. டயானாவிற்கு பின் சார்ல்ஸ் கேமிலாவை  திருமணம் செய்து கொண்டார். இந்த கேமிலாதான் அங்கு தற்போது முடி இளவரசி. ஏனென்றால் இவர் ராணியின் மகனின் மனைவி.  இவர்களுக்கு ஏதேனும் ஆகும் பட்சத்தில் டயானாவிற்கு பிறந்த வில்லியம் மற்றும் அவர் மனைவி கேத்ரீன் பதவிக்கு வருவார்கள் என்பது தான் தற்போதைய முடிவாக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web