ஸ்ரீமதியின் இறப்பிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!! அமைச்சர் சூளுரை!!

 
ஸ்ரீமதி


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர்  தனியார் பள்ளி செயல்பட்டு வந்தது. இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி  ஜூலை 13ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்  பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்து மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பிற்கு  நீதிக் கேட்டு ஜூலை  17ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது.  

ஸ்ரீமதி

இந்தக் கலவரத்தில்  ஈடுபட்ட 322 க்கும் மேற்பட்டோர் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.  ஸ்ரீமதி மரண வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  நேற்று மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  ஸ்ரீமதியின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவர்,  ஸ்ரீமதி  மரணம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.  மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ,  ஸ்ரீமதி மரணத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின்  ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 

ஸ்ரீமதி
இதுகுறித்து செல்வி விடுத்த செய்திக்குறிப்பில்   “ஸ்ரீமதி மரணம் குறித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி திமுக எம்.எல்.ஏ கணேசன் இருவரும்  வீட்டுக்கு வந்து எங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அதே சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடன் பேசுமாறு போன் போட்டு கொடுத்தார்.  முதல்வரிடம் எங்களின் மனக்குமுறலை  நேரில்  கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.  அதை ஏற்றுக் கொண்ட முதல்வர் .   நீங்கள் என் சகோதரி எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்தித்து உங்கள் கோரிக்கைகளை சொல்லலாம் எனக் கூறியுள்ளார்.  ஸ்ரீமதி வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.   தமிழக முதல்வர்  ஸ்ரீமதி மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என உறுதியளித்தது எங்களுக்கு ஆறுதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web