ஆதார் இணைப்பு திட்டத்தால் இலவச மின்சாரம் ரத்து ஆகுமா? - அமைச்சர் திட்டவட்டம்..

 
Minister

மின் இணைப்பு என் உடன் ஆதார் இணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு ஒரு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் எனினும் இந்தத் திட்டத்தில் அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம் மின்வாரியர் துறையில் சில முறைகேடுகளை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் மின் இணைப்பு எண் ஆதார் இணைப்பால் மின்வாரியத்தில் உள்ள விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் பறிக்கப்படுமா என்று தொடர்ந்து அச்சம் நிலவுகிறது. உங்களுக்கு நமது செந்தில்பாலாஜி மார்க் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
என்
அப்போது பேசிய அவர், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை. இதனை மீண்டும் மீண்டும் உறுதியாக கூறுவதாக தெரிவித்தார்.
விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மின்சார துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ரூ.9,048 கோடி மானியம் வழங்கினார். இந்தாண்டு கூடுதலாக ரூ.4,000 கோடி மானியத்தை வழங்கியுள்ளார். இதனால் இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும், என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
From around the web