காற்றாடித் திருவிழா!! களைகட்டிய மாமல்லபுரம்!! குவிந்த சுற்றுலாப் பயணிகள்!!

 
காற்றாடித் திருவிழா

இந்தியாவின் 76வது சுதந்திர தினம், நாளை ஆகஸ்ட்15ம் தேதி கோலாகலமாக  கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சர்வதேச காற்றாடி  திருவிழா மாமல்லபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டுக்கு பிறகு மாமல்லபுரம் காற்றாடி திருவிழாவால் களைகட்டியுள்ளது.  


இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தாய்லாந்து, அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் வந்துள்ளன. பட்டம் பறக்க விடுதலில் கைதேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு காத்தாடிகளை பறக்கவிடுகின்றனர். இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஓஷன் வியூ பகுதி ஜேசிபி இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காத்தாடி திருவிழாவைத் காண குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பெரியவர்கள் 150 ரூபாய் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற வேண்டும்

உணவு அரங்குகள் மற்றும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இது குறித்து சுற்றுலாத்துறை முதன்மை செயலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மாமல்லபுரத்தில் இன்று துவங்க உள்ள சர்வதேச காற்றாடி திருவிழா 13, 14, 15 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அணியும் 10 முதல் 20 காற்றாடிகளைக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு காற்றாடியும் 20 முதல் 25 அடி வரை உள்ளன.அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதனால் அங்கு இந்த போட்டியை நடத்துவதற்காக அந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம்.

பட்டம்

கொரோனா பாதிப்புக்கு பிறகு சுற்றுலா துறையை, வளர்ச்சி அடைய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று.காற்றாடி திருவிழா நடத்த நிறைய திறந்த வெளியும்,  காற்றும் அதிகம் வீச வேண்டும் அதனால்தான் மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுடைய திருவிழா நடைபெற இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web