2025ல் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும்!

 
மகளிர் கிரிக்கெட்

வரும் 2025ல் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக்குழு கூட்டம் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த மிதாலிராஜ்

அதற்கு முன்னர் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர்கள் கொண்ட மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்திலும், அதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி இங்கிலாந்திலும் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர்  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை: மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ், இரண்டாவது இடத்தில் ஜூலன் கோஸ்வாமிக

சர்வதேச விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் சூழல் தற்போது நிலவி வருவதால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. நாளை சென்னை மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள 44 சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட  வீரர், வீராங்கனைகள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web