இன்று உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தொடக்கம்!! கோப்பையை வெல்லப்போவது யார்?!

 
உலகக்கோப்பை கால்பந்து


உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. 1930 முதல் நடைபெற்று வரும் இந்த கால்பந்து திருவிழா 2ம் உலகப்போர் காரணமாக 1942, 1946 ஆண்டுகளில் மட்டும் நடத்தபடவில்லை. இறுதியாக 2018ல் ரஷியாவில் நடத்தப்பட்ட உலகக்கோப்பை போட்டியில் பிரான்ஸ் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள்  இன்று கத்தாரில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்கவிழாவினை அடுத்து இன்று நடைபெற உள்ள முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து

உலகம் முழுவதிலும் உள்ள  கால்பந்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆர்வத்துடனும் 22வது உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்க காத்துகிடக்கின்றனர். இன்று தொடங்கும் இந்த  திருவிழா டிசம்பர் 18ம்  தேதி வரை 29 நாட்கள் தொடர்கிறது. அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை எந்த உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறாத இந்திய அணி இந்த முறையும் தகுதி பெறவில்லை.

இதில் கலந்து கொள்ளும்  32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள எல்லா கண்டத்தை சேர்ந்த அணிகளும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்றாலும், கோப்பையை வெல்வதில் ஐரோப்பியா மற்றும் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுவரை ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகள் 12 முறையும், தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகள் 9 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 5 முறை சாம்பியனான பிரேசில் அணி மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி  அணிகளும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளன.  

உலகக்கோப்பை கால்பந்து

தொடக்க நாளான இன்று நடைபெறும் ஆட்டம்  அல்கோர் நகரில் 60000 இருக்கைகள் வசதி கொண்ட அல் பேத் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  தரவரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் கத்தார் அணி முதல்முறையாக உலக கோப்பையில் கால் பதிக்கிறது. போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. போட்டி தொடங்கும் முன் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சி நடத்தப்படும். அதனை தொடர்ந்து போட்டி நடத்தப்படும்.  இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் தென்கொரியா இசைக்குழுவினரின் ஆட்டம் பாட்டம் கோலாகலமாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web