வாவ்..!! வைரலாகும் வீடியோ!! நமீதாவுக்கு இரட்டை ஆண்குழந்தைகள்!!

 
நமீதா

2004 ல் நடிகர் விஜயகாந்த் ஜோடியாக  எங்கள் அண்ணா திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. விஜய், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து  ரசிகர்கள் இதயத்தை கொள்ளை கொண்டார். கவர்ச்சி கன்னியாக ரசிகர்களின் மனதில் நின்று விட்ட நமீதா தொடர்ந்து பிரபல ரியாலிட்டி ஷோவில்  நடுவராக இருந்தார். மேலும்  பிக் பாஸ் தமிழ் ஒன்று போட்டியாளராகவும் தம்மை இணைத்துக் கொண்டார். 


 2017ல் நமீதா தனது காதலரான வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.  5 வருடங்கள் கழித்து  தனது பிறந்த நாளில் தான் கர்ப்பம் தரித்ததை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து கர்ப்பகால புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். அதே போல்  தனது வளைகாப்பு வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.  

நமீதா
இந்நிலையில் தற்போது தான் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததை பதிவிட்டுள்ளார். இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறோம்.இதனால் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளோம். உங்கள் ஆசைகளும் அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என நம்புகிறேன் . அவர்களின் சிறந்த சுகாதார பராமரிப்பு மற்றும் சேவைகளுக்குஉண்மையிலேயே நன்றியுள்ளவராக இருப்போம் எனவும் இவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய  மருத்துவ குழுவிற்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?