மல்யுத்த பூஜா சிஹாக்கின் கணவர் திடீர் உயிரிழப்பு!! அதிர்ச்சி!!

 
பூஜா

 

இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா சிஹாக். இவர்  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் . மல்யுத்த போட்டியில் பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வெற்றி வாகை சூடினார்.  பூஜா சிஹாக்கின் கணவர் அஜய் நந்தல், ஹரியானா மாநிலம் ரோஹ்டக்கில் உள்ள கர்ஹி போஹார் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அஜய் நந்தல், மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அஜய்
இது குறித்து ரோஹ்டவின் துணைக் கண்காணிப்பாளர்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஜய் நந்தலின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மகாராணி கிஷோரி ஜாட் கன்யா மகாவித்யாலயா அருகில் நடைபெற்றுள்ளதாகவும்,  இது நடைபெற்ற போது அஜய் நந்தலுடன் அவரது நண்பரான ரவி இருந்ததுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அஜய் நந்தலின் தந்தை இது குறித்து அஜய்யின் நண்பர் ரவிக்கு போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் அதிகமாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். 

பூஜா
சனிக்கிழமை இரவு 7 மணிக்கு  அஜய் நந்தல் மரணம் குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்து வந்தனர். சம்பவம் நடந்தபோது ஜாட் கல்லூரிக்கு அருகில் சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். உயிரிழந்த அஜய் நந்தலின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!