பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்! தண்ணீரில் மிதக்கிறது பெங்களூரு!

 
மஞ்சள் அலெர்ட்

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மஞ்சள் அலெர்ட்

பெங்களூருவில் தினமும் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யலாம்  எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு கனமழை அதாவது   மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதே நகரின் பல பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் பெங்களூரு  வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மஞ்சள் அலெர்ட்

நகரின் முக்கிய பகுதிகளான ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி  பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.  தெருக்களில் வாகனங்கள் பல இடங்களில் மிதக்கின்றன. இன்னும் தாழ்வான பகுதிகளில் தரைத்தளம் மூழ்கும் அளவிற்கு வெள்ள நீர் புகுந்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை  வீட்டிலிருந்து வேலை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web