உனக்கு 20 எனக்கு 40!! மாணவியை கரம் பிடித்த ஆசிரியர்!! வீடியோ வைரல்!!

 
சங்கீத் குமார், சுவேதா

காதலுக்கு கண் இல்லை, காதலுக்கு வயதில்லை என்ற கூற்றுகள் உண்டு. தற்போதைய காலத்தில் ஆண்கள் ஒருவரையொருவர் காதலிப்பதும், பெண்கள் ஒருவரையொருவர் காதலிப்பதும் திருமணம் செய்துக் கொள்வதும், அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதும் சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சம்பவம் தான் பீகாரின் நிகழ்ந்துள்ளது.

திருமணம்

பீகாரில் பயிற்சி நிலையத்தின் 42 வயது ஆசிரியர் ஒருவர் அதில் படித்து வந்த 20 வயது மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  பீகாரின் சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக சங்கீத் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். வயது 42. இந்த நிலையில், சுவேதா குமாரி,  வயது 20, என்ற மாணவி ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.


ஆங்கில பாடம் கற்றுக்கொள்ள சென்ற மாணவி சுவேதாவிற்கு ஆசிரியர் காதல் பாடம் கற்றுக்கொடுத்துள்ளார். மாணவியும்   ஆசிரியர் சங்கீத்தும்   காதலில் விழுந்து ஒருவரையொருவர் மனம் உருகி காதலித்துள்ளனர். பின்னர் இருவரும்   திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது