இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!! பட்டப்பகலில் பயங்கரம்!!!

 
பீகார் பீகார்

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சிபாரா பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் நடந்த சென்ற இளம்பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 


இந்த துப்பாக்கி சூட்டில் கழுத்தில் பலத்த காயமடைந்த இளம்பெண் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். காயமடைந்த இளம்பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர். காய்கறி வியாபாரியின் மகளான இளம்பெண், சுடப்பட்டதற்கான காரணம் காதல் விவகாரமாக இருக்கலாம் என பாட்னா போலீசார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கி

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?