இளம்பெண்களே உஷார்!! பட்டப்பகலில் 25 பெண்களிடம் பாலியல் சீண்டல்!!

 
தனுஷ்

சென்னையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. குறிப்பாக மயிலாப்பூர், அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக செல்லும் இளம் பெண்களுக்கு குறிப்பிட்ட ஒரு மர்ம நபர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்து குவிந்தன. அதிலும் குறிப்பாக நடைபயிற்சிக்கு செல்லும் பெண்கள், தனியாக நடந்து செல்பவர்களை மையமாக வைத்தே பாலியல் சீண்டல்கள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உஷாரான போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

போலீஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் சி.பி. ராமசாமி சாலை வழியாக சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை ஒரு மர்ம நபர் பின்தொடர்ந்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத இடமாக பார்த்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த கல்லூரி மாணவி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். 

இதை கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, உடனடியாக போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், மாணவி குறிப்பிட்டு சொன்ன இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த நபரின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் அந்த மர்ம ஆசாமியை வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இளம் நடிகர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், ‘‘பிடிபட்டவரின் பெயர் தனுஷ் என்று தெரிய வந்துள்ளது. பி.காம். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தின் கணக்காளராக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தனுசுக்கு திருமணமாகி 10 மாத கை குழந்தை உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சாலையில் தனியாக நடந்து செல்லும் மற்றும் நடைபயிற்சியில் ஈடுபடும் பெண்கள் என மொத்தம் 25 பேருக்கு மேல் பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web