அரசு வேலை கிடைக்காததால் இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை!! தொடரும் சோகம்!!

 
யமுனை

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் நக்லா தல்பி பகுதியில் வசித்து வந்தவர் கர்மவீர்சிங். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் அரசு வேலைக்கு விண்ணப்பித்து தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். மேலும் ராணுவத்தில் சேர வேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார் என்று கூறப்படுகிறது. கடினமாக முயற்சித்தும் கர்மவீர்சிங்குக்கு அரசு வேலை கிடைக்காததால் மிகவும் விரக்தியில் இருந்துள்ளார்.

நீச்சல்
இந்நிலையில் நேற்று வாலிபர் கர்மவீர்சிங் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததால், தற்கொலைக்கு முன்னதாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், ‘‘அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று பதிவு செய்துவிட்டு ஆற்றில் குதித்துள்ளார்.இதை பார்த்த அவரது உறவினர்கள், நண்பர்கள் பதறிப் போய் கர்மவீரை தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால்,  இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து கர்மவீரரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

தற்கொலை

இதற்கிடையில் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் கர்மவீரின் செருப்பு மற்றும் செல்போனை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அவர் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற வியூகத்தில் உடலை தேடி வருகின்றனர்.எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு தற்கொலை கிடையாது என்பதை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும்போதும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடுவது வேதனை அளிக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web