ஏரியில் தவறி விழுந்து இளைஞர் பலி!! மீன் பிடிக்க சென்ற போது பரிதாபம்!!

 
பரத்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் 23 வயதான பரத்குமார். இவர் சென்னை அடுத்த மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நவம்பர் 12 ம் தேதி நண்பர்களுடன் ஆலமரம் பகுதியில் உள்ள புழல் ஏரியில் மீன் பிடிக்க சென்றார்.

செம்பரம்பாக்கம் ஏரி

அப்போது ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கால் இடறி ஏரியில் தவறி விழுந்து விட்டார். அப்போது அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால் அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு போலீசார் ஏரியில் இறங்கி பரத்குமார் உடலை தேடி வந்தனர்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக உடலை தேடி வந்த தீயணைப்பு துறையினர், நேற்று மாலை அம்பத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட புழல் ஏரியில் மீட்டனர். சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன் பிடிக்க சென்றவர் மாயமாகி உயிரிழந்த  இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web