லாரியின் முன்பக்கத்தில் கட்டப்பட்ட இளைஞர்!! நூதன தண்டனை!! வீடியோ வைரல்!!

 
பஞ்சாப்

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான், தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான் என்ற பழமொழிக்கு ஏற்றால் போல் பஞ்சாப்பில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் லாரியிலிருந்து கோதுமை மூட்டைகளை திருடியதாக இளைஞர் ஒருவரை லாரிக்கு முன்பக்கமாக கட்டி 1.5 கி.மீ தூரம் லாரியை ஓட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரியில் கட்டப்பட்ட இளைஞர்

பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சாருக்கு லாரி ஒன்று கோதுமை லோடை இறக்க வந்திருக்கிறது. அப்போது கடைகளில் இறக்கி வைக்கப்பட்ட கோதுமை மூட்டைகளில் இரண்டு மூட்டைகள் குறைந்துள்ளது.  இது குறித்து லாரியின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து ஓட்டுநர் விசாரித்துள்ளார். அந்த இளைஞர் இரண்டு கோதுமை மூட்டைகளை திருடி சென்றதை சிலர் பார்த்துள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் ஜெயல் சிங் அந்த இளைஞரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.  ஆனால் அந்த இளைஞர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லாரி ஓட்டுநர் இதனை காதில் வாங்காமல் கடுமையாக தாக்கி கைகால்களை கயிறு கொண்டு கட்டியுள்ளார். பின்னர் அதே லாரியின் முன்புறத்தில் அந்த இளைஞரை சேர்த்து கட்டியுள்ளார்.


அவரை நன்றாக பிடித்துக்கொள்ள லாரியின் ஓட்டுநரும் அவருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டார். லாரியை வேறு ஒருவரிடம்  இயக்க சொல்லியுள்ளார் லாரி ஓட்டுநர் ஜெயல் சிங். பின்னர் அங்கிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள முக்த்சார் காவல்நிலையத்திற்கு லாரி இயக்கப்பட்டிருக்கிறது. இந்த 1.5 கி.மீ தூரமும் அந்த இளைஞர் தனது உயிரை கையில் பிடித்தபடி வந்திருக்கிறார். அதேபோல அந்த இளைஞரை லாரியின் ஓனர் ஒரு கையில் பிடித்திருந்திருக்கிறார்.   இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது போலிசார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர்.   ஆனால் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து ஓட்டுநர் மீது காவல்துறையினர்   வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கோதுமை மூட்டைகளை திருடியதற்கான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் எனவே இதனை அடிப்படையாக வைத்துதான் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். எனவே லாரி உரிமையாளர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்..

From around the web