பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே!! ரசிகர்கள் உற்சாகம்!!

 
ஜிம்பாப்வே

நடப்பாண்டிற்கான சர்வதேச டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்& ஜிம்பாம்வே அணிகளுக்கான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. பெர்த் மைதானத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

டி20

அதன் பின்னர் கிரைக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 130 ரன்களை எடுத்து 8 விக்கெட்டை இழந்தது. மிகவும் கடுமையான இந்த போட்டியில் ரன் குவிப்பது ஜிம்பாப்வே அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அதிலும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்து சென்வில்லியம்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஜிம்பாப்வேயின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முகம்மது வாஷிம் பலமாக பந்து வீசினார்.

ஜிம்பாப்வே

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களத்தில் குதித்தது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1 ஒன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானை வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்த ஷாம் மசூத் ரசிகர்களுக்கு சிறிதளவு ஆறுதல் கொடுத்தார். கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் இருக்கையின் நுனிக்கே வரும் அளவுக்கு ஆட்டம் மிகவும் சூடுபிடித்தது. இறுதியில் ஜிம்பாப்வே அணியின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web