அட... 113 வயது... அசராமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த மூதாட்டி!

 
காஞ்சன்பென்

 மகாராஷ்டிராவில் இன்று  காலை சட்டப்பேரவைத் தேர்தல்   தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், 113 வயதான காஞ்சன்பென் பாட்ஷா என்ற மூதாட்டி தனது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.


மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், மும்பையில் 113 வயது மூதாட்டி ஒருவர் தனது வயது மற்றும் உடல் பலவீனத்தையும் கருத்தில் கொள்ளாமல், வாக்களித்தேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்குச்சாவடியில்  வந்து தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார்.
113 மூதாட்டி ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்களித்தது மக்களை ஆச்சரியப்படவைத்துள்ளது.  மும்பையில் வசித்துவரும் காஞ்சன்பென் ஒவ்வொரு மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்து வருகிறார். இந்த செயலை தவறாமலும், அர்ப்பணிப்புடனும் செய்துவருகிறார். வயதான வாக்காளருடன் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும் வந்திருந்தார்.

காஞ்சன்பென்


காஞ்சன்பென் வயது முதிர்ந்த போதிலும், காஞ்சன்பென் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துவிடுவார். அவர் கடமையை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைக் குடிமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் உத்வேகத்துடன் நடந்துகொள்வார் எனக் கூறியுள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web