பெரும் சோகம்.. சபரிமலைக்கு சென்ற 12 வயது சிறுமி.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

 
சபரிமலை

சபரிமலை யாத்திரைக்குச் சென்ற  12 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் சன்னதியை அடைவதற்காக நடைபயணம் மேற்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்த குமரன், ஜெயலட்சுமி தம்பதிகளின் 12 வயது மகள் பத்மஸ்ரீ (12) என்பவர் சபரிமலைக்குச் சென்றார்.  சபரிமலை மலையேற்றப் பாதையில் உள்ள அப்பாச்சிமேடு என்ற இடத்தில் மயங்கி விழுந்தார்.

கூட்ட நெரிசல்

இதையடுத்து பத்மஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக பம்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு 3 வயதில் இருந்தே இதயநோய் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The body has been shifted to the government hospital at Pamba.
(Representative Image-Shutterstock)

 கடந்த வெள்ளிக்கிழமை முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில், பலர் வரிசையிலிருந்து விலகி, வனப்பகுதி வழியாக சன்னிதானம் நோக்கி பயணிக்கத் தொடங்கினர். இதனால் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய தேவஸ்தான நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

From around the web