அதிர்ச்சி!! 12 வயசு சிறுமி உடல் முழுக்க காயங்களுடன் கொடூர பலாத்காரம்!!

 
சிறுமி

பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் சமீபகாலத்தில் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாட்னா மாவட்டத்தை அடுத்துள்ள மைஹார் நகரில் 12 வயது சிறுமி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.  சிறுமியின் உடலில் கடித்ததால் ஏற்பட்ட காயங்களும், கொடூரமாகத் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களும் காணப்பட்டன. அங்குள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலில் பணிபுரியும் இருவர், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல்
அவர்கள் இருவரையும் கைது செய்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த கொடூரன்கள் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் கடினமான பொருளைச் செருகியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே எந்தவொரு விஷயத்தையும் உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அம்மாவட்ட எஸ்பி அசுதோஷ் குப்தா கூறுகையில், “இதில் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். அவர்கள் 12 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் கடினமான பொருள் செருகியுள்ளனர் என்பதை நான் மறுக்கவில்லை. இருப்பினும், இதை நம்மால் மருத்துவ சோதனைக்குப் பின்னர் மட்டுமே உறுதி செய்ய முடியும். மருத்துவ அறிக்கை இன்னும் எங்களுக்கு வரவில்லை.

அந்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சிறுமியின் உடலில் பற்களால் கடித்ததால் ஏற்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. இப்போது சிறுமியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிராக நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சிறுவன் க்ரைம் பலாத்காரம் பாலியல்

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரும் நேற்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பலாத்காரம், போக்சோ, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் அத்தனையும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

குற்றவாளிகள் இருவரும் அங்குள்ள மா சாரதா தேவி கோயிலில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இருவரின் செயல் கோவிலின் புகழைக் கெடுத்து விட்டதாகவும் நிர்வாகம் சார்பில் அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

From around the web