துப்பாக்கியை திருடிய 13 வயது சிறுவன்.. கதறிய ஓய்வுபெற்ற காவலர்!

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜல்வாடி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன். அவனது தாய் ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள். இந்த சூழ்நிலையில், ஜனவரி 31 ஆம் தேதி, அவனது தாயின் வேண்டுகோளின் பேரில், சிறுவன் தனது தாயுடன் வீட்டு வேலை பார்க்கும் காவலரின் வீட்டிற்கு வேலைக்குச் சென்றான். அந்த நேரத்தில், வீட்டின் அலமாரியில் ஒரு துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்கள் இருப்பதை சிறுவன் கண்டான்.
அது ஒரு பொம்மை துப்பாக்கி என்று நினைத்து, சிறுவன் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எடுத்து கொண்டு வந்தான். அதன் பிறகு, மறுநாள், தனது நண்பர்களுடன் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மேய்ச்சலுக்குச் சென்று துப்பாக்கியை வானத்தை நோக்கிச் சுட்டான். இதற்கிடையில், தனது துப்பாக்கி காணாமல் போனதை உணர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுவன் துப்பாக்கியைத் திருடி 20 முறை வானத்தை நோக்கிச் சுட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் 20 காலி தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டாக்களை போலீசார் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!