பருவமடைந்த 14 வயது சிறுமி.. மாதவிடாய் வலியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

 
மாதவிடாய்

மகாராஷ்டிர மாநிலம், மும்பை, மல்வானி, லக்ஷ்மி சால்ஸ் நகரில் வசிக்கும் 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பருவ வயதை நெருங்கும் சிறுமி, முதல் மாதவிலக்கு, வலி போன்றவற்றை ஆன்லைனில் தேடித் தெரிந்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வலி தாங்க முடியாத சிறுமி  வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். மேலும் சிறுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் ஏற்பட்டதையும், அதனால் ஏற்பட்ட வலியையும் தனது தோழிகளிடம் கூறி உள்ளார்.

மேலும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பார்த்து அதனால் ஏற்படும் வலிக்கு பயந்தார். அவர் தனது முதல் மாதவிலக்கை எதிர்கொண்ட சில மணி நேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார் என்பது இறுதியில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தைகளின் வாழ்வில் குறிப்பிட்ட வயதுக்கு பின் இயற்கையாக ஏற்படும் பருவமடைதல் அச்சத்தை போக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web