15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகியைத் தேடும் போலீசார்!

 
தவெக ராயப்புரம் தியாகு

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமியைப் புதுச்சேரி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி மீது போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரைப் புதுச்சேரி காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

சென்னை ராயபுரம் 50-வது வட்ட தவெக இணைச் செயலாளராகப் பதவியில் இருக்கும் தியாகு என்பவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் பல ஆண்டுகளாக அறிமுகமானவர் ஆவார். இந்நிலையில், அந்தச் சிறுமியைப் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இது குறித்துத் தகவலறிந்ததும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள ராயபுரம் காவல் நிலையத்தில் 'ஜீரோ எப்ஐஆர்' பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை முறையான மேல் நடவடிக்கைகளுக்காகப் புதுச்சேரி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாகியுள்ள தவெக நிர்வாகி தியாகுவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.