17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு - இளம்பெண் மீது போக்சோ வழக்குப்பதிவு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்ட 19 வயது இளம்பெண் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் ஒரே கல்வி நிறுவனத்தில் பயின்று வந்துள்ளனர். ஒரே நிறுவனத்தில் படித்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த இளம்பெண் சிறுவனின் வீட்டிற்குச் சென்று அவருடன் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் தொடர்ச்சியாக அந்த இளம்பெண்ணிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, அந்த இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. சட்டப்படி பாதிக்கப்பட்டவர் 18 வயதிற்குட்பட்ட சிறுவன் என்பதால், இச்சம்பவம் குறித்துச் சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவட்டார் காவல் துறையினர், 19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
