திருவிழாவிற்கு மகிழ்ச்சியாக சென்ற 27 வயது இளம்பெண் உயிரிழப்பு.. நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்!

 
ராட்டினம்

டெல்லியில் நடைபெற்ற திருவிழாவில் ராட்டினத்தின் பாதுகாப்பு கதவு திடீரென உடைந்த விபத்தில், கீழே விழுந்து படுகாயமடைந்த 27 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவைக் கடந்தும் விழா நடத்தப்பட்டதும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாததும் இந்தப் பேரத்திற்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள மேற்கு டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் அமைந்துள்ள தஸ்ரா மைதானத்தில் கடந்த சில நாட்களாகத் திருவிழா ஒன்று நடைபெற்று வந்தது. இப்பகுதிக்குத் திருவிழாவைக் காணவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கேளிக்கை ராட்டினங்களில் சவாரி செய்யவும் ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இதற்கிடையே, கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி அதிகாலை சுமார் 1:36 மணியளவில், அங்கே இயங்கிவந்த 'மிக்ஸர்' (Mixer) எனப்படும் ராட்டினத்தில் பொதுமக்கள் ஆர்முடன் அமர்ந்து சவாரி செய்துகொண்டிருந்தனர்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

அப்போது, ராட்டினம் சுழன்று கொண்டிருந்த வேளையில், அதில் ஒன்றின் பாதுகாப்பு கதவு திடீரென எதிர்பாராதவிதமாக உடைந்து திறந்தது. இந்த திடீர் விபத்தில் ராட்டினத்தில் அமர்ந்திருந்த குதியா (27) என்ற இளம்பெண் நிலை தடுமாறி காற்றில் இருந்து பலத்த உயரத்திலிருந்து கீழே விழுந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தற்பொழுது தில்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. மேலும், இந்த விபத்தில் மற்றொரு நபருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மானவி தற்கொலை

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, மேற்கு டெல்லியின் விகாஸ்புரியில் நடைபெற்ற இந்தத் திருவிழாவிற்கு நேற்று இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விதிகளைத் மீறி நள்ளிரவு கடந்தும் திருவிழாவும், ராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுக்களும் தொடர்ந்து இயக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. முறையான அனுமதியின்றி நேரத்தைக் கடந்து விழாவை நடத்தியதும், ராட்டினத்தின் தரம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட கடுமையான அலட்சியமுமே இந்த இளம் உயிரைப் பறிக்கக் காரணமாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேளிக்கை மையத்தின் உரிமையாளர்கள், ராட்டினத்தை இயக்கியவர்கள் மற்றும் விழாக் குழுவினர் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் கீழ் கூடுதல் பிரிவுகளைச் சேர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கக் காவல்துறை திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் லாப நோக்கத்திற்காக விதிகளை மீறும் இதுபோன்ற கேளிக்கை கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.