அப்பா காப்பாத்துப்பா... 3 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலி!! சோகம்!!

 
மேகநாதன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாமக்கல்பாளையம் பகுதியில்  வசித்து வருபவர்  ரங்கசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் விவசாயத்தொழில்  செய்து வருகின்றனர். இவர்களுடைய மூத்த மகன்  3 வயது மேகநாதன் . ரங்கசாமியின் வீட்டின் முன்பு 4 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது.இதில் தண்ணீர் நிரம்பி இருந்தது.

கடல் நீர் மூழ்கி தண்ணீர்

நேற்று முன்தினம் மாலை மேகநாதன் வீட்டுவாசலில்  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் சிறுவன்  தவறி விழுந்து அலறினான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ரங்கசாமி, தண்ணீர் தொட்டியில் குழந்தை மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆம்புலன்ஸ்
 அங்கு குழந்தையை  பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும்,  இது குறித்து தகவல் அறிந்து வந்த சிறுவலூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!