3 வயது குழந்தை தெரு நாய்கள் கடித்து பலி... கதறித் துடித்த பெற்றோர்!

 
மருத்துவமனை


 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் தெரு நாய்கள் கடித்துகுதறியதில் 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தெருநாய்களால் தொல்லைகள், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  மதூராவின் கொஸிகலான் பகுதியில் நேற்று ஜனவரி 22ம் தேதி பிற்பகல்   3 மணியளவில் சோபியான் (வயது 3) எனும் சிறுவன் தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான்.

வெறி நாய் 
அப்போது, திடீரென அங்கு வந்த 6 தெரு நாய்கள் அந்த சிறுவனை   கடித்து குதறி இழுத்து சென்றுவிட்டன. சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு  மற்ற சிறுவர்கள் ஓடிச்சென்று சோபியானின் உறவினர்களிடம்  தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த குடும்பத்தினர் குச்சிகளால் அந்த நாய்களை விரட்டி அடித்தனர்.  ஆனால், அதற்குள் அந்த நாய்கள் தாக்கியதில் சோபியானின் உடல் முழுவதும் கடிக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர், உடனடியாக அந்த சிறுவனை அவனது குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

நாய்

அங்கு, முதலுதவிக்கு பிறகு  சோபியானின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களின் தாக்கம்  அதிகமாக இருந்ததால்  அந்த மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், போகும் வழியிலேயே சோபியான் பரிதாபமாக பலியானதாக தெரிகிறது.  
இச்சம்வம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அப்பகுதி மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!