கதறிய பெற்றோர்... வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு!

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை பகுதியில் வசித்து வரும் விவசாயி தரணி-பிரியா. இவர்களின் 3 வயது குழந்தை ஜெயப்பிரியா. இவர் செவ்வாய்கிழமை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது தாய் வீட்டிற்குள்ளே சென்று பிறகு வெளியே வந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் தரணி- பிரியா புகார் அளித்தனர்.
இதனையடுத்து கடந்த 3 நாட்களாக காணாமல் போன குழந்தையை தேடி வந்த நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு காணாமல் போன குழந்தை ஜெயப்பிரியா வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் பாழடைந்த கிணற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன பெண் குழந்தை 3 நாட்களுக்குப் பின்பு கிணற்றில் சடலமாக மீட்டக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 3 வயது குழந்தை விளையாடும்போது தவறி வந்து கிணற்றில் விழுந்து விட்டாரா? அல்லது விரோதம் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசி விட்டுச் சென்றார்களா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!