75 வயது முதியவரை காதலித்து, கரம் பிடிக்கும் 30 வயது இளம்பெண் - இணையத்தில் வைரலாகும் விசித்திரத் திருமணம்!

 
காதல் முதியவர் திருமணம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 வயது முதியவரும், 30 வயது இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான ராம்சுகர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ராணி ராஜ்புத் என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் செய்வதில் ஆர்வமுள்ள ராணி ராஜ்புத், ராம்சுகரின் மகளைப் பார்ப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.

5வது திருமணம்

அந்தச் சந்திப்புகளின்போது முதியவர் ராம்சுகருக்கும் இளம் பெண் ராணி ராஜ்புத்திற்கும் இடையே நட்பு மலர்ந்து, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. தங்களுக்கு இடையே உள்ள 45 ஆண்டுகள் வயது வித்தியாசத்தைக் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரின் முன்னிலையில் இந்த ஜோடி தங்களது நிச்சயதார்த்த மோதிர மாற்றும் சடங்கை வெற்றிகரமாக முடித்துள்ளது. நவராத்திரி பண்டிகைக்குப் பிறகு இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருமணம்

தற்போது இவர்கள் மோதிரம் மாற்றிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது. இவ்வளவு பெரிய வயது வித்தியாசத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், "உண்மையிலேயே காதலுக்குக் கண்ணில்லை..." என்பது போல விதவிதமான கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.