வீட்டு அலமாரியில் பதுங்கிய 3 அடி பாம்பு... பொதுமக்கள் பீதி!

 
snake snake

 

கடலூர் அருகே உள்ள வெளிசெம்மண்டலம் பகுதியில், குடியிருப்பு ஒன்றின் வீட்டு அலமாரியில் சுமார் 3 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் அலமாரியைத் திறந்தபோது, உள்ளே பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டு அலறியடித்து ஓடி வந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது.

பாம்பு குறித்த தகவல் உடனடியாகப் பாம்பு பிடி ஆர்வலருக்குத் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், அலமாரியில் பதுங்கியிருந்த அந்தப் பாம்பை மிக லாவகமாகப் பிடித்துச் சாக்கிற்குள் அடைத்தார். குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அந்தப் பாம்பினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய நேரத்தில் மீட்கப்பட்டது. இதனால் அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

பிடிபட்ட அந்த 3 அடி நீளப் பாம்பு, மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடத்தில் அந்தப் பாம்பு விடுவிக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியைத் தேடிப் பாம்புகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.