இளம்பெண்ணிடம் எல்லை மீறிய 41 வயது நபர்.. வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கொடூரம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண். ஓசூரில் உள்ள முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் பிளஸ் 2 படிக்கும் போது, அம்மாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், தான் வாணியம்பாடி ஜப்ராபாத் சியாலி தெருவை சேர்ந்த நூருல்லா மகன் சமீர் என்கிற முகமது இர்ஷாத் என்றும், தனக்கு 20 வயது என்றும் கூறியிருந்தார்.

இதை உண்மை என நம்பிய அந்த இளம்பெண் அவரிடம் செல்போனில் பேசியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமீர், அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை பெற்று, அவளை காதலிப்பதாக கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், சமீரை நேரில் பார்த்ததும், அவருக்கு 40 வயதைத் தாண்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அவருடன் பேசுவதை நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த சமீர், இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் அந்த இளம்பெண் பேசியபோது, அவரது நிர்வாண புகைப்படங்களையும் காட்டி மிரட்டியுள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணின் தாய் செல்போனில் போட்டோவை அனுப்பி பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் ஆன்லைனில் 15 ஆயிரம் வரை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பரில், ஜோலார்பேட்டையில் உள்ள பாழடைந்த ரயில்வே குடியிருப்பு பகுதியில், இளம் பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்தார் சமீர். மேலும், அதே மாதத்தில், ஒசூர் அருகில் உள்ள அத்திப்பள்ளி பகுதிக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை செல்போனில் பதிவு செய்து கடந்த 12ம் தேதி தனது தாய் செல்போனுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நேற்று முகமது இர்ஷாத் என்கிற சமீர் (41) என்பவரை கைது செய்தனர். அவர் மீது 8வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். சமீருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
