அம்மன் கோவில் கருவறைக்குள் 5 அடி நல்ல பாம்பு! பதறிய பூசாரி.... வைரல் வீடியோ!

 
திருவாடனை

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கோவில் கருவறைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாடானை பிடாரி அம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக நல்ல பாம்பு ஒன்று கோவில் கருவறைக்குள் புகுந்துள்ளது.

கருவறைக்குள் பாம்பு இருப்பதை பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் கருவறையை விட்டு வெளியேறி, அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கருவறைக்குள் பதுங்கியிருந்த பாம்பை கவனமாக தேடினர்.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு சுமார் 5 அடி நீளமுள்ள அந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். பின்னர் பாம்பு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டது.தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் கோவில் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. திருவிழா நடைபெறும் நேரத்தில் கோவில் கருவறைக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.