5 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு... ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம்!

 
பாலியல் நிலத்தகராறு பாலியல் நிலத்தகராறு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனிதநேயத்தை தலைகுனிய வைக்கும் வகையிலான நெஞ்சைப் பதற வைக்கும் கொடூரக் குற்றச் சம்பவம் கடந்த ஜூன் 11 அன்று அரங்கேறியுள்ளது. 5 வயது சிறுமியை காமுகன் ஒருவன் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயதுப் பச்சிளம் சிறுமி, கடந்த ஜூன் 11 அன்று தனது தாத்தாவுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளாள். அப்போது குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற தாத்தா, சிறுமியை பைக்கிலேயே அமர வைத்துவிட்டு அவசர வேலைக்காகச் சற்றே தூரம் சென்றுள்ளார். அந்த குழந்தை தனியாக இருப்பதைக் கண் கொட்டாமல் கண்காணித்துக் கொண்டிருந்த சந்தன் குமார் ஷா (29) என்ற கொடூரக் காமுகன், சுற்றும் முற்றும் ஆள் நடமாட்டம் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஓடிச் சென்று, அந்த 5 வயதுச் சிறுமியைப் பலவந்தமாகக் வாயைப் பொத்திக் கடத்திச் சென்று மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளான்.

தாயாரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி அளித்த ‘பகீர்’ வாக்குமூலம்..!

வேலையை முடித்து விட்டுத் திரும்பி வந்த தாத்தா, பைக்கில் இருந்த பேத்தியைக் காணாமல் அலறியடித்துள்ளார். இது குறித்துப் பதறிப்போன சிறுமியின் தந்தை பலியா காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தை  தீவிரமாகக் கருதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், குற்றவாளியை வேட்டையாட உடனடியாக தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டார்.

போலீசாரின் இந்த மின்னல் வேக விசாரணையில், கடத்தப்பட்ட சிறுமியைப் பாழடைந்த ஒரு கட்டிடத்தில் இருந்து போலீசார் பத்திரமாக மீட்டதுடன், அங்கிருந்த குற்றவாளியான சந்தன் குமார் ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட சிறுமிக்கு அரசு தலைமை மருத்துவமனையில் அவசரப் பிரிவில் தீவிர மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில்,சிறுமி,  சந்தன் குமார் ஷாவினால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உடல் ரீதியாகக் கடுமையான சித்திரவதைகளைச் சந்தித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் பிறப்புறுப்பில் படுகாயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த அவலத்தைக் கண்டு மருத்துவர்களே கண்ணீர் விட்டுள்ளனர். கைதான சந்தன் குமார் ஷா மீது போக்சோ மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

5 வயதுக் குழந்தையைக் கடத்திக் கற்பழித்த இந்த மிருகத்தனமான சம்பவம் உத்தரப் பிரதேச மக்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கு கொந்தளிப்பையும், அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பலமாகக் கிளப்பியுள்ளது.