10 ஆண்டுகளில் 70% அதிகரிப்பு... இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891-ஆக உயர்வு | இன்று உலக சிங்கங்கள் தினம்!

 
ஆசிய சிங்கம் சிங்கங்கள்

உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு, குஜராத்தின் கிர் வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 891-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் 523-ஆகவும், 2020-ஆம் ஆண்டில் 674-ஆகவும் இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, அரசின் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 891-ஆக கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 70%-க்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண் சிங்கம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'பிராஜெக்ட் லயன்' திட்டத்தின் தீவிர செயல்பாடுகளால், சிங்கங்களின் வாழ்விடப் பரப்பு 30,000 சதுர கிலோமீட்டரில் இருந்து 35,000 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.

தொடர் வனக்கண்காணிப்பு, மருத்துவப் பராமரிப்பு, வேட்டைத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் மக்களின் பங்களிப்பு ஆகியவை ஆசிய சிங்கங்களின் இனப்பெருக்கம் மற்றும் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.