20 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்த 72 வயது முன்னாள் கால்பந்து வீரர்!
Sep 11, 2026, 07:50 IST
மலேசியாவின் பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ஒருவர், தமக்கு வயதில் மிகவும் இளையவரான 20 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மலேசியாவின் தேசியக் கால்பந்து அணியில் 1970 மற்றும் 1980-களில் முன்னணி நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர் டத்தோக் அப்தா அலிப் (72). வயது முதிர்ந்த நிலையிலும், டத்தோக் அப்தா அலிப் தனக்கு வயதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்கும் 20 வயது இளம்பெண் ஒருவரைப் பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார்.
இவர்களின் திருமணப் புகைப்படங்களும் தகவல்களும் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையேயான பெரிய வயது வித்தியாசத்தைக் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
