நெல்லையில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

 
பாலியல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு வெறும் 5 மாதங்களுக்குள் நீதிமன்றம் விரைவான தீர்ப்பை வழங்கிச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் அப்பு (28) என்பவர் 7 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த மே 14, 2026 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்புவைக் கைது செய்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி சுரேஷ்குமார் நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கினை மிகத் துரிதமாக விசாரித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தண்டனை பெற்றுத் தந்த இன்ஸ்பெக்டர் சாந்தி, அரசு வழக்கறிஞர் உஷா மற்றும் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 21 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.