தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி... ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் 9 வயது சிறுவன் பலி!

சென்னையில் 9 வயது சிறுவன் க்யோன் பெர்ரே சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் "மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரில் வசித்து வருபவர் பிரேம்குமார்.
இவரது மகன் 9 வயது பி.மைத்தீஸ்வரன். இந்த சிறுவன் ஜனவரி 22ம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற போது அவருக்கு 2 கால்களும் நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து, அவரது பெற்றோா் வீட்டின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்துக்கு நடைப்பயிற்சி செல்ல அறிவுறுத்தினா். அங்கு நடை பயிற்சி சென்ற சிறுவன் நடக்க முடியாமல் 2 கால்களும் செயலிழந்து கீழே விழுந்து விட்டதாக தெரிகிறது.
இதன் பின் திருவள்ளூரில் உள்ள மருத்துவர்களிடம் சிறுவனை அழைத்து சென்ற பிறகு, எழும்பூர் குழந்தைகள் அரசு நல மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாககவும், அவருக்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
"நாளுக்கு நாள் அவா் கை, கால்கள், நரம்புகள் முழுவதும் செயலிழந்துள்ளன. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாளுக்கு முன் உயிரிழந்தாா்" என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!