பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி... ஆம்புலன்சிலேயே பிறந்த ஆண் குழந்தை!
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் ஜவ்வாது மலைத்தொடரில் தோனியூர் ஜார்தான்கொல்லை மலை கிராம பகுதியில் வசித்து வரும் தம்பதி சேகர் - நிர்மலா . இவர்களுடைய மகன் 4வயது மோகித். இவர்கள் கர்நாடக மாநிலம் சிக்மங்களுார் பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த நிர்மலா, பிரசவத்திற்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெகுந்தி சுங்கச்சாவடியில் நிர்மலாவிற்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பணியில் இருந்த சுங்கச் சாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் நிர்மலாவை, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே நிர்மலாவுக்கு பிரசவவலி அதிகமாகி ஆண் குழந்தை பிறந்துவிட்டது. தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
