அமெரிக்காவுக்கு தக்க பதிலடி.. இறக்குமதி பொருட்களுக்கு 15% வரை வரி உயர்த்திய சீன அரசு!

 
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

அமெரிக்கா சீனப் பொருட்களுக்கான வரிகளை 10 சதவீதம் உயர்த்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்துள்ளது. சீன அரசாங்கம் எடுத்துள்ள வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், சில வகையான கார்கள் மற்றும் பிற பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவிலிருந்து பெரிய இயந்திரங்கள், லாரிகள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் மற்றும் விவசாய இயந்திரங்கள் கொண்ட கார்களின் இறக்குமதியைப் பாதிக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கை வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராக சீனா உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web