அதிர்ச்சி வீடியோ!! நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த BMW கார்!!

 
தீப்பிடித்த கார்

சென்னை குரோம்பேட்டையில்  இன்று காலை வழக்கம் போல்  வாகன நெரிசல் மிகுந்திருக்கும் வேளையில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.  அந்த வழியில்  பச்சை கலர் BMW கார்  வந்துகொண்டிருந்தது. திடீரென அந்த காரின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் BMW காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு உடனடியாக  தாவி வெளியே குதித்தார்.


 

ஓட்டுநர் வெளியேறிய சிறிது நேரத்தில் அந்த கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற வாகனஓட்டிகள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்கள்  உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  

தீப்பிடித்த கார்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில்  தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட  பரபரப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து தீப்பிடித்து எரிந்த காரை  அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!