அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்.. ஆய்வகத்தில் இருந்த ஆசிட் விழுந்து கண் போன பரிதாபம்..!

 
தாழையூத்து அரசு மேல்நிலைப் பள்ளி

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் - சண்முகசுந்தரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் 11ம் வகுப்பும், இரண்டாவது மகள் 9ம் வகுப்பும், மகன் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

school

தாழையூத்து பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டாவது மகள், பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஆய்வகத்தில் உட்கார வைத்து படிக்க வைக்கப்பட்டுள்ளார். வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் கதவைப் பூட்ட முயன்றபோது, ​​ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டில் கதவின் அருகே இருந்த மாணவியின்  மீது விழுந்ததில் இரு கண்களும் சேதமடைந்தன.

இதையடுத்து மாணவியை உடனடியாக மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், அரசு பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டி, பலத்த காயம் அடைந்த மாணவ, மாணவிக்கு கண் பார்வையை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக இருந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

School girl

இந்நிலையில் மாணவியின் தந்தை பாலமுருகன் தாளியூத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியஎ கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web