ப்ளீஸ்... தமிழ்ல பேசும்மா... இங்கிலீஷில் பேசும் தாயிடம் கதறும் சிறுவன்... வைரல் வீடியோ!

 
சிறுவன்

 சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றீல்  ஒரு தாய் தனது மகனிடம்  ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார். ஆனால் அது பிடிக்காமல், சிறுவன் அழுதபடி “ஒழுங்கா பேசுமா” எனக் கூறுகிறான்.

அதற்கு தாய், “அழக்கூடாது” என ஆங்கிலத்தில் கூறுகிறார். அத்துடன் “ஒழுங்கா என்றால் எப்படி?” என்று தமிழில் கேட்க, உடனே சிறுவன் “இப்படி, இப்படித்தான் பேசுவாங்க” என மழலையாகச் சொல்கிறான். திரும்பவும் தாய் ஆங்கிலத்தில் பேச முயன்றபோது, “தமிழ்ல பேசு” எனக் கோபத்துடன் கூறுகிறான்.
தாய், “ஸ்கூலில் டீச்சர்  எப்படி பேசுவார்கள்? தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா?” எனக் கேட்டபோது, சிறுவன் யோசித்தபடி “ஆங்கிலத்தில்” எனச் சொல்ல, “அதனால்தான் நானும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறேன்” என தாய் பதில் கூறுகிறார்.  இதற்கு சிறுவன் “நான் சொன்னத கேளு” என பாசமுடன் பதிலளித்து, பின்னரும் தாய் ஆங்கிலத்திலேயே பேச சிறுவன்  தலையில் அடித்து கொண்டு அழுகிறான்.
இந்த வீடியோ 52000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள்னார். சிலர் லைக் செய்துள்ளனர். “வீட்டிலும் ஆங்கிலம் பேசினால் பள்ளி மாதிரி நினைவுதான் வரும்”, “ஆங்கிலம் தெரியும் என காட்டிக் கொள்வதற்காகவே சிலர் இப்படி செய்கின்றனர்” எனப்  பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு  வருகின்றனர்