தன்னுடன் வாழ மறுத்த மனைவி.. தொழிலதிபரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த கணவர்..!!

 
முகமது அசாருதீன்

நெல்லை பேட்டையில் பெண் தொடர்பு விவகாரத்தில் தொழிலதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்ணின் கணவர் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலி டவுன் அடுத்த கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த காதர் ஒலி மகன் முகமது அசாருதீன் (35). இவருக்கு ஹமிதா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. முகம்மது அசாருதீன் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நெல்லை பேட்டை விவிகே தெரு அருகே திரிபுரசுந்தரி அம்மன் கோயில் மேலத்தெருவில் முகமது அசாருதீன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்ததும் துணை கமிஷனர் சரவணகுமார், டவுன் உதவி கமிஷனர் ஆவுடையப்பன், பேட்டை பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முகமது அசாருதீன் கடையில் நெல்லை டவுன் புட்டகாரத்தி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த மகாராஜன் மனைவி பகவதி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பகவதிக்கும் முகமது அசாருதீனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பகவதி தனது கணவர் மகாராஜனை விட்டு விலகி முகமது அசாருதீன் மூலமாக பேட்டை வி.வி.கே. தெருவில் வசித்து வந்தார். தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து முகமது அசாருதீன் குடும்பம் நடத்தி வந்தது மகாராஜனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்.

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஓட ஓட விரட்டி படுகொலை..!

அதன்படி நேற்று இரவு மகாராஜன், பகவதியை பார்க்க வந்த போது அங்கு வீட்டில் முகமது அசாருதீன் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள், முகமது அசாருதீனை ஓட ஓட துரத்தி வெட்டினர். இதில் முகமது அசாருதீன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து தகாத உறவு தகராறில் முகமது அசாருதீன் கொலை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மகாராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பகவதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web