சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்!

 
தீப்பிடித்து எரிந்த கார் தீப்பிடித்த

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்த விபத்தில், உரிய நேரத்தில் குடும்பத்தினர் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார். அப்போது கார் நெய்க்காரப்பட்டி பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது இன்ஜின் அதிகளவில் சூடாகி திடீரெனத் தீப்பிடித்துள்ளது.

தீப்பிடித்த கார்

விபத்தை உணர்ந்த உடனே ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் உடனடியாகக் காரைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, தனது குடும்பத்தினரைச் பாதுகாப்பாக வெளியேற்றினார். இதனால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும்மின்றி உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கார் கொளுந்துவிட்டு எரிவதைக் கண்ட அப்பகுதி வாகன ஓட்டிகள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் போராடி அணைத்தனர்; இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.