அதிர்ச்சி... கோவில் திருவிழாவில் புகுந்த கார்!! ஒருவர் பலி!! 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

 
விபத்து

காஞ்சிபுரம் பேருந்து நிலையம்  கவரை தெருவில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழாவை ஒட்டி  நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா காஞ்சிபுரம் பாவாஜி தெருவில் இரவு 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி ஊர்வலத்தில் பின்தொடர்ந்து நடந்து சென்றனர்.

விபத்து
இந்த கோவில் விழாவை புகைப்படம் பிடிப்பதற்காக அதே பகுதியில் வசித்து வரும் புகைப்படகலைஞர் வெங்கடேசனை ஏற்பாடு செய்து இருந்தனர்.இவருக்கு வயது 50.  இவர் அம்மன் வீதி உலா, பக்தர்கள் கூட்டத்தை படம் பிடித்தபடி சென்றார். அப்போது சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.இதில் புகைப்பட கலைஞர் வெங்கடேசன் மற்றும் சாமி தரிசனம் செய்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், இசைக்கலைஞர்கள்  என ஒருவர் விடாமல் அனைவர் மீதும்  கார்  மோதியது.  இந்த கோர விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகைப்பட கலைஞர் வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிலில் ஆடி மாத திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.
காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். விசாரணையில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவரை விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web