உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு... பிரச்சாரத்தில் சிறுவனைப் பேச வைத்ததாக புகார்!

 
உதயநிதி சிறுவன்

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது, முதலமைச்சர் விஜய் குறித்து அவமதிக்கும் வகையில் சிறுவனை மைக்கில் பேச வைத்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கடுமையான குற்றமாகும். தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் உதயநிதி

தாராபுரம் பிரச்சாரத்தின் போது சிறுவனிடம் மைக்கைக் கொடுத்து, குறிப்பிட்ட அரசியல் தலைவரை அவமதிக்கும் வகையில் பேசச் செய்ததாகத் தரப்பட்ட புகாரின் அடிப்படையில், தாராபுரம் போலீசார் தற்போது உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.