சித்திரைத் திருவிழாவில் அன்னதானம் வழங்க சான்றிதழ் அவசியம்.. . திடீர் உத்தரவு!

 
சித்திரை திருவிழா

மதுரை மாவட்டம் மீனாட்சி திருக்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவர். அந்த வகையில் நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மீனாட்சி அரசாளும் ஊர் என்பதால் அதன் பெருமையை உலகமே அறியும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமான மதுரை நிர்மாணிக்கப்பட்ட ஊர். இதனால் அதன் வீதிகள் கோவிலைச் சுற்றி சதுரமாக விரிந்து கொண்டே போகும். இந்த வீதிகளில் தேரில் மீனாட்சியும் சொக்கநாதரும் பவனி வரும் அழகைக் காண கண்கோடி வேண்டும். 

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்..!

 மதுரை சித்திரை திருவிழா  
ஏப்ரல் 12 - கொடியேற்றம்  
ஏப்ரல் 21 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ஏப்ரல் 22-  சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்  
ஏப்ரல் 23 - கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுல்  

சித்திரை திருவிழா


இந்நிலையில், மீனாட்சி அம்மன் தேரோட்டத்தில்  மாசி வீதியில் பக்தர்களுக்கு உணவு, நீர்மோர் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும். பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், உணவுகள், குளிர்பானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் செயற்கை சாயங்கள் சேர்க்கக்கூடாது. உணவு, உணவுப் பொருட்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு  9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில்  புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web