பேராசிரியர்களால் பாலியல் தொல்லை... கடிதம் எழுதி கல்லூரி மாணவி தற்கொலை... கதறும் உறவினர்கள்!

 
தற்கொலை

 ஆந்திர பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில், சைதன்யா பொறியியல்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து  வரும் மாணவிகள்  அடுத்தடுத்து  மர்மமான முறையில் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது.  இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி பேராசிரியர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, மாணவி தனது வாட்ஸ் அப்பில் தந்தை மற்றும் சகோதரருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.  


 

அந்த கடிதத்தில் தன்னைப் போல பல மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் தங்களின் படங்கள் ஆபாசமாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடப்படும் என  பேராசிரியர்கள் அச்சுறுத்தியதாகவும் கடிதத்தில் எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி டிப்ளமோ படித்து வந்தார்.  அவர் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு  கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி மரணமடைந்து விட்டதை உறுதி செய்தனர்.  

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்

தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் போக்ஸோ மற்றும் ராகிங் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   சிறுமியின் சகோதரர் தனது தங்கையின் மரணம் குறித்து   "எனது தங்கையின் உடலில் காயங்களோ, ரத்த அறிகுறிகளோ இல்லை.  விடுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எனது தங்கை எங்களுக்கு அளித்த தகவலின்படி, பாலியல் துன்புறுத்தலால் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் மரணத்திற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web