அதிர்ச்சி !! கல்லூரி மாணவி நடனம் ஆடிய போது சரிந்து மரணம்!!

 
பிரதீப்தி

சமீபகாலமாக சின்னஞ்சிறு வயதில் மாரடைப்பு ஏற்படுவதும், அதனால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதும்  பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து பலி,திருமண மேடையில் சரிந்து பலி, நடனம் ஆடிய போது உயிரிழப்பு என திடீர் உயிரிழப்புக்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் கல்லூரி  மாணவி நடனம் ஆடிய போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு ஆதர்ஷ் கல்லூரியில் நடன நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

dead

இந்நிகழ்ச்சியில் அதே பகுதியில் வசித்து வரும்   குண்டு அஞ்சையா மற்றும் சாரதாலா தம்பதியின் 16 வயது மகள் பிரதீப்தி சிங் சக மாணவர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.   திடீரென மாணவி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக  மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி கொடுத்தனர். ஆனால் மாணவிக்கு மூச்சு பேச்சு இல்லை.   மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அந்த  மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம்  குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணம் மாரடைப்பு நெஞ்சுவலி

இந்த மாணவிக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததாக  பெற்றோர்கள் தெரிவித்தனர்.  மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் அறிவுறுத்தி இருந்தும்  மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் மாணவிக்கான அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டு வந்த நிலையில் தான்  மாணவி உயிரிழந்துள்ளார்.
 இதுகுறித்து  இதய நோய்   மருத்துவர்  ”இதய நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடலை வருத்தி செய்யும் எந்த வேலைகளையும் செய்ய அனுமதிக்கவேண்டாம். அவை அவர்களின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.  மேலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்”எனவும் அறிவுறுத்தியுள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web